100 ஆண்டுகள் ஆனாலும் கூட தமிழகத்தில் பாஜகவால் 1-2% வாக்குகளுக்கு மேல் பெற முடியாது- நிர்மல்குமார்
தமிழகத்தில் பாஜகவால் 1 முதல் 2 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற முடியாது என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கூறியுள்ளார்.
லோக் பவனில் திருவள்ளுவர் புகைப்படத்தில் உள்ள உடைக்கு காவி நிறம் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், “தமிழகத்தில் பாஜக இத்தகைய மலிவான தந்திரங்களையும் அரசியலையும் முன்னெடுக்க முயற்சிக்கக் கூடாது... தமிழக மக்கள் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் கூட, தமிழகத்தில் பாஜகவால் 1 முதல் 2 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற முடியாது.. மேகதாது அணை கட்ட கண்டிப்பாக முதல்வர் அனுமதிக்க மாட்டார்.. தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தகுதி அடிப்படையிலேயே நடைபெறும். கடந்த ஆட்சியில் பல உயர்ந்த பதவிகள் பணம் கொடுத்து வாங்கப்பட்டது. அரசுப்பணி நியமனங்களுக்காக ஒருபோதும் லஞ்சம் பெறப்படாது.40 ஆண்டுகளுக்கு பின் வெளிப்படை தன்மையுடன் அரசு வழக்கறிஞர் நியமனம் நடைபெறும், அனைத்து நியமனங்களும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பம். பேரம் பேசி அரசியல் செய்யும் நிலை தவெகவுக்கு இல்லை. திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றதால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. திமுக- அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததால் அதிமுகவினர் தவெகவுக்கு வருகின்றனர்” என்றார்