“சிபிஐ அதிகாரிகள் சம்மன் தர வந்தனர்” - சி.டி.நிர்மல் குமார்
Nov 3, 2025, 18:47 IST
எங்களிடம் எந்தவிதமான விசாரணையும் நடத்தப்படவில்லை என தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார், “எங்களிடம் எந்தவிதமான விசாரணையும் நடத்தப்படவில்லை. முதற்கட்ட விசாரணையை அவர்கள் தொடங்கி இருக்கின்றனர். கரூர் விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் சம்மன் கொடுக்க தவெக அலுவலகம் வந்தனர். போட்டோ மற்றும் சிசிடிவி உள்ளிட்ட ஆதாரங்களை ஒப்படைக்குமாறு கேட்டுள்ளனர். நாங்கள் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டால் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுப்போம். சிசிடிவி காட்சிகள், பிரசாரம் தொடர்பான தகவல்களை 3 நாட்களில் வழங்குவோம்” என்றார்.