×

கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு..!!

 

ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை தாண்டியது விற்பனை ஆகி வருகிறது.

ஆனாலும் ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை அகற்ற எண்ணெய் விலை உயர்வு மிக சிறியது தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது.

ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில், கப்பல் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை தாண்டியது. கடந்த வெள்ளிக்கிழமை கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 92.69 டாலராக இருந்த நிலையில் இன்று 100 டாலரை தாண்டியது. 2022ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை தற்போது 110 டாலருக்கு மேல் வர்த்தகமாகி வரும் நிலையில்,ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடர்ந்து நடைபெற்றால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 150 டாலரை தாண்டிவிடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.