×

கிளாம்பாக்கத்தில் அலைமோதும் கூட்டம்

 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இரண்டாவது நாளாக கூட்டம் அலைமோதுகின்றது.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை நாளை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது நாளை மறுநாள் ஜனவரி 16 ஆம் தேதி மாட்டு பொங்கல் 17 ஆம் தேதி காணும் பொங்கல் என தொடர் ஐந்து நாட்கள் விடுமுறை எதிரொலியாக சென்னையில் உள்ள மக்கள் தங்களின் சொந்த ஊரில் பொங்கல் விழா கொண்டாட இரண்டாவது நாளாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்க்கு வருகை தந்துள்ளனர். முன் பதிவு செய்துள்ள பயணிகளும் முன் பதிவு செய்யாத பயணிகள் என பல ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை நோக்கி பயணிக்க கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் குவிந்துள்ளதால் கூட்டம் அலை மோதுகின்றது.