பயிர்க்கடன் தள்ளுபடி- அரசாணை வெளியீடு
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்தார். அதாவதுரூ.75,000 கடன் வாங்கி இருந்தால் 100% முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இந்த கூடுதல் தள்ளுபடி காரணமாக அரசுக்கு கூடுதலாக ரூ.953 கோடி நிதிச்சுமை ஏற்படும் என்றும், ஒட்டுமொத்தமாக ரூ.6,720 கோடி மதிப்பில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் முதலமைச்சர் விஜய் கூறினார்.
இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி ரூ.953.06 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரூ.75,001 முதல், ரூ. 1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்ற 2.38 லட்சம் பேருக்கு எஞ்சிய ரூ.40,000 தள்ளுபடி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ஏற்கெனவே ரூ.35,000 விடுவித்த நிலையில் தற்போது எஞ்சிய ரூ.40,000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.