×

இ-பாஸில் தவறான தகவல்கள் தந்தால் கிரிமினல் நடவடிக்கை : தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

இ-பதிவு தளத்தில் முறைகேடு செய்து இபாஸ் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 28 வரும் ஆம் தேதி வரை மேலும் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொற்று பரவலை கருத்தில் கொண்டு 3 வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.திருமண நிகழ்வுகளுக்கு சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு,அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ,கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை,
 

இ-பதிவு தளத்தில் முறைகேடு செய்து இபாஸ் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 28 வரும் ஆம் தேதி வரை மேலும் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொற்று பரவலை கருத்தில் கொண்டு 3 வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.திருமண நிகழ்வுகளுக்கு சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு,அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ,கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி ,தென்காசி ,திருநெல்வேலி, திருப்பத்தூர் ,திருவண்ணாமலை ,தூத்துக்குடி ,திருச்சி, விழுப்புரம், வேலூர் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே இ -பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இ-பாஸிற்கு தவறான தகவல்கள் தந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, தவறான தகவல்கள் தந்திருந்தாலோ, ஒரு நிகழ்விற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இ-பதிவுகள் செய்திருந்தாலோ சிவில், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் 27 மாவட்டங்களில் திருமணத்திற்கு வரும் அத்தனை விருந்தினர்களுக்கும் சேர்த்து ஒரு இ- பதிவு மட்டுமே செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.