#CRIME : சரித்திர பதிவேடு ரவுடி நள்ளிரவில் வெட்டிக்கொலை..!
Jul 20, 2026, 11:32 IST
சென்னை, வண்ணாரப்பேட்டையில் சரித்திர பதிவேடு ரவுடி பலியாடு அஜய்(20) நள்ளிரவில் மர்ம நபர்கள் வெட்டிக்கொலை.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில், சரித்திர பதிவேடு குற்றவாளியான "பலியாடு" அஜய் (20) என்பவரை நள்ளிரவில் மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இச்சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.