×

திருப்பதி கோயிலில் கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் தரிசனம்..!

 

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் இன்று (ஆக.29) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.