தவெகவில் புதிய மாவட்டங்கள் உருவாக்கம்
தவெகவில் புதிய கட்சி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு நெல்லை ஆர்.எஸ்.முருகன், ரெட்டியார்பட்டி நாராயணன் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கி உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது
1. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்
2. திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்டம்
3. திருநெல்வேலி மத்திய மாவட்டம்
4. திருநெல்வேலி வடக்கு மாவட்டம்
5. திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டம்
ஆகிய 5 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... https://www.dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&e=2&st=75kfq593&dl=0
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.