×

போராடுபவர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது அராஜகம் – நயினார் நாகேந்திரன்…!

 

நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதற்கு எதிராக போராடியவர்களை தமிழகக் காவல்துறை கைது செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் கண்டனத்திற்குரியது. 

நேற்று வரை சிரித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இன்று தங்கள் கண்முன்னே பிணமாகக் கிடப்பதை அக்குழந்தையின் குடும்பத்தாராலும் உறவினர்களாலும் தாங்கிக் கொள்ள முடியுமா?

இன்று இக்குழந்தைக்கு நடந்த கொடூரம் நாளை நமது பிள்ளைக்கும் நடந்து விடுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களை நிம்மதியாக இருக்க விடுமா?

தங்களின் கோபத்தையும் அச்சத்தையும் போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தக் கூட தவெக ஆட்சியில் மக்களுக்கு உரிமையில்லையா?

முதல்வர் திரு. விஜய் அவர்கள், தமிழகத்தில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, குற்றங்களுக்கு எதிராக போராடுபவர்களைக் கைது செய்வது அப்பட்டமான பாசிசப் போக்கு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போராடுபவர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது அராஜகம்!

கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதற்கு எதிராக போராடியவர்களை தமிழகக் காவல்துறை கைது செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் கண்டனத்திற்குரியது.

நேற்று வரை சிரித்து விளையாடிக்… pic.twitter.com/zioJyIaqzm

— Nainar Nagenthran (@NainarBJP) June 15, 2026