×

“மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் வெற்றி பெற கூடாது”- சண்முகம்

 

மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் எக்காரணம் கொண்டும் வெற்றி பெற கூடாது என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

மதுராந்தகத்தில் சிபிஎம் வேட்பாளருக்காக பிரச்சாரம் மேற்கொண்ட சண்முகம், “எக்காரணத்தைக் கொண்டும் மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் வெற்றி பெற கூடாது. அதை மீறி அவர் வெற்றி பெற்றால், வரக்கூடிய காலத்திலும் அரசியல் ஆதாயத்திற்காக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறொரு கட்சிக்கு செல்லும் நடவடிக்கைகளுக்கு அது ஊக்கம் தருவது போல் அமைந்துவிடும். இடைத்தேர்தலில் தவெகவை தோற்கடிக்க வேண்டும். தவெக வேட்பாளர் மக்களால் விரட்டி அடிக்கப்படுகிறார்” என்றார்.

தமிழக அரசியல் களத்தில் "இடைத்தேர்தல் என்றால் அது எப்போதும் ஆளுங்கட்சிக்குத்தான் சாதகமாக இருக்கும்" என்பது பல ஆண்டுகளாகக் கூறப்பட்டு வரும் ஒரு பொதுவான நம்பிக்கையாகும். அரசு கையில் அதிகாரமும், எந்திர பலமும் இருப்பதால் ஆளுங்கட்சிதான் எளிதில் வெல்லும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் ஆளுங்கட்சியான தவெகவுடன் கூட்டணியில் உள்ள இடதுசாரிகளே தவெக வெற்றி பெறக்கூடாது என பிரச்சாரம் செய்து வருகிறது.