தவெகவுக்கு ஆதரவு இல்லை என்பதால் திமுகவுக்கு ஆதரவு என்று அர்த்தம் இல்லை - பெ.சண்முகம்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடும் என சிபிஐஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், “மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடும். செப்.15ம் தேதி வேட்பாளர்களை அறிவிக்கிறோம். இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு இல்லை என்பதால் திமுகவுக்கு ஆதரவு என்று அர்த்தம் இல்லை. வெளியில் இருந்து தவெக ஆட்சிக்கு அளிக்கப்படும் ஆதரவு தொடரும். இடதுசாரிகள் தவெக கூட்டணி உள்ளிட்ட எந்த அணியிலும் இல்லை. நடைபெற இருப்பது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் கிடையாது. 2 பேரும் 20 நாளிலேயே பதவியை தூக்கி எறிந்தனர். இது ஆரோக்கியமற்ற அரசியல் என அப்போதே எடுத்துரைத்தோம். மக்களின் உணர்வுகளுக்கு மாறாக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.. மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி போட்டி. தாராபுரத்தில் இந்திய கம்யூ. கட்சி போட்டி. இடதுசாரிகளுக்கு வாக்காளர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். வேட்பாளர்கள் குறித்து நாளை மறுநாள் அறிவிக்கப்படும்” என்றார்.