×

தற்போது திமுக கூட்டணி இல்லை- சண்முகம்

 

தமிழ்நாட்டில் தற்போது திமுக கூட்டணி என்ற ஒன்று இல்லை என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூரியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், “தமிழ்நாட்டில் தற்போது திமுக கூட்டணி என்ற ஒன்று இல்லை. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் இல்லை. யார் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றோம் என்பது முக்கியமல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைவதே முக்கியம். தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது சிபிஎம் சுயேட்சையாக எடுத்த முடிவு. மக்கள் நலன் சார்ந்த பிரச்சனையில் திமுகவோடு சேர்ந்து போராட தயாராக உள்ளோம். கட்சி மாறுவது, பதவியை ராஜினாமா செய்வது எல்லாம் தமிழ்நாட்டில் இயல்புதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கலைந்துவிடும் என சொல்வது தவறு. யார் சொல்லியும் தவெகவிற்கு ஆதரவு தரவில்லை, கட்சியின் சொந்த முடிவு” என்றார்.