☰
×

"அவர் ஒரு நிமிடம் கூட அப்பதவியில் நீடிக்க தகுதியற்றவர்”- சண்முகம்

 

தேர்தல் ஆணையம் படிவம் ஆறில் புதிதாக கேட்கப்பட்ட விபரங்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கி விட்டது என்று பொய் சொல்லி உச்ச நீதிமன்றத்தையும், நாட்டு மக்களையும் ஏமாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்குக என சிபிஐஎம் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் ஆணையம் படிவம் ஆறில் புதிதாக கேட்கப்பட்ட விபரங்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கி விட்டது என்று பொய் சொல்லி உச்ச நீதிமன்றத்தையும், நாட்டு மக்களையும் ஏமாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்குக!

நேர்மையற்ற இவர் ஒரு நிமிடம் கூட அப் பதவியில்… pic.twitter.com/8JBEGH3Rlz

— Shanmugam P (@Shanmugamcpim) October 5, 2026


இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு ஆணையர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  வாக்காளர் பட்டியல்களின் 'சிறப்பு தீவிரத் திருத்தப் பணியின்' (Special Intensive Revision - SIR) போது, நாடு முழுவதிலும் உள்ள சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், தங்களின் அனுமதியோ அல்லது ஆலோசனையோ பெறாமல் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து உத்தரவுகளைப் பிறப்பித்ததாக ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இவரைப் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

இந்நிலையில் சண்முகம் தனது எக்ஸ் தளத்தில், “தேர்தல் ஆணையம் படிவம் ஆறில் புதிதாக கேட்கப்பட்ட விபரங்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கி விட்டது என்று பொய் சொல்லி உச்ச நீதிமன்றத்தையும், நாட்டு மக்களையும் ஏமாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்குக!
நேர்மையற்ற இவர் ஒரு நிமிடம் கூட அப் பதவியில் நீடிக்க தகுதியற்றவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.