அண்ணாமலை போடுவது "மாரீச மான் வேடம்"- சண்முகம்
பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி - அமித்ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI(M)) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.
பெயர் மாற்றம், தமிழகத்தில் பா.ஜ.க-வின் புதிய உத்தி!
— Shanmugam P (@Shanmugamcpim) June 5, 2026
ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவுதான்.
பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி - அமித்ஷா ஆசியுடன்… pic.twitter.com/5oPF8u9Cnw

இதுதொடர்பாக சண்முகம் தனது எக்ஸ் தளத்தில், “பெயர் மாற்றம், தமிழகத்தில் பா.ஜ.க-வின் புதிய உத்தி!ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவுதான்.பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி - அமித்ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை.ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவதெல்லாம் பாஜக கட்சியினர் இதில் இணைக்கப்படுகிறார்கள் என்பதே, அண்ணாமலை போடுவது "மாரீச மான் வேடம்" என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.