×

“கர்நாடக முதல்வரை சந்திக்கும் முன் விவசாய சங்கத்தினரை சந்தியுங்கள்”- விஜய்க்கு சிபிஐ அட்வைஸ்

 

கர்நாடக அரசு சொல்வது போல் நடந்துகொள்வது இல்லை. ஒருபோதும் தமிழகத்தின் உரிமையை விட்டுத் தரக்கூடாது என CPI மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய  CPI மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், “தமிழக முதலமைச்சர் விஜயின் பேச்சுவார்த்தை பின்னிருந்து ஆரம்பிக்கக்கூடாது. போராடி பெற்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துமாறு பேச வேண்டும். தமிழக விவசாயிகளின் கோரிக்கையை எடுத்துக்கூற வேண்டும். காவிரி விவகாரத்தில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது. கர்நாடக அரசு சொல்வது போல் நடந்துகொள்வது இல்லை. ஒருபோதும் தமிழகத்தின் உரிமையை விட்டுத் தரக்கூடாது. முதல்வர் விஜய் கர்நாடக முதல்வரை சந்திக்கும் முன் விவசாய சங்கத்தினரை சந்தித்து கோரிக்கைகளை கேட்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் காவிரி நீர் பிரச்சனையில் உறுதியாக உள்ளது 
 
பாலன் இல்லத்தில் நடைபெற்றது கரப்பான் பூச்சி அமைப்பினரின் போராட்டம். அதற்கு இடதுசாரி மாணவர்கள் ஆதரவளித்தோம். எங்கள் அலுவலகத்தை 6 நாட்கள் வழங்கினோம். வந்து பேசுகிறவர்கள் எங்களுக்கு எதிராகக் கூட பேசுகிறார்கள். அது ஒரு ஜனநாயக மேடை. சில நேரங்களில் முதல்வரை அவர்கள் விமர்சிக்கிறார்கள். அதை அந்த நேரத்தில் தடை செய்ய முடியாது. நோக்கம் தமிழக முதல்வருக்கு எதிரானது அல்ல, ஒன்றிய அரசுக்கு எதிரானதுதான்” என்றார்..