கண்மாயில் இறங்கிய மாடு- காப்பாற்ற சென்ற உரிமையாளரும் பலி! மஞ்சுவிரட்டில் சோகம்
Jan 16, 2025, 16:40 IST
காரைக்குடி அடுத்த சிராவயல் மஞ்சு விரட்டில் 106 பேர் காயமடைந்தனர். மாட்டுடன் நீரில் மூழ்கி ஒருவர் பலியானார். மாடும் உயிரிழந்தது.
சிவகங்கை மாவட்டம் சிராவயல் மஞ்சு விரட்டு ஊரார்களின் வழிபாட்டுக்கு பின் 11.50 மணிக்கு தொடங்கி 2.45 மணி வரை நடைபெற்றது . போட்டிகளை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். 240 காளைகள் 165 வீரர்கள் தொழுவத்தில் நடைபெறும் மஞ்சு விரட்டில் கலந்து கொண்டனர். மைதானத்தின் பிற பகுதிகளில் கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டதால் 106 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10 மருத்துவ குழு கக்கள் 20 மேற்பட்ட அவசர கால ஊர்திகள் காயமடைந்தவர்களை முதலுதவிக்கு பின் மருத்துவமணைகளுக்கு கொண்டு சென்றனர். அதில் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.