செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
Aug 25, 2023, 11:59 IST
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்றத் தடை சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதன் பிறகு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 12ஆம் தேதி ஆஜர் செய்யப்பட்ட அவரை ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 28ஆம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.