×

டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் ஏன் ஆஜராகவில்லை? - நீதிமன்றம் கேள்வி

 

டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் ஏன் ஆஜராகவில்லை? என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார்  மற்றும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசியிருந்தார். இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4 நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் ஏன் ஆஜராகவில்லை? என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், டி.ஐ.ஜி. வருண் குமார் ஆஜரானார். கடந்த முறை விசாரணையின் போது, வழக்கில் முறையாக ஆஜராவேன் எனக் கூறி சென்றீர்கள். அப்படி இருக்கையில் இன்று ஏன் ஆஜராகவில்லை? என சீமான் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.