டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்க நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் ரசீது வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் ரசீது வழங்க வேண்டும் என டாஸ்மாக் நிா்வாகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் , சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் ஆகியவற்றில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை & அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி ஜி.தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளில் ரசீது புத்தகங்கள் பராமரிக்கப்படவில்லை, மதுபானம் வாங்குவோருக்கு ரசீதுகள் எனவும் அதிருப்தி தெரிவித்தது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. உத்தரவை அமல்படுத்தியது குறித்த ஆகஸ்ட் அறிக்கை தாக்கல் செய்வதற்காக, வழக்கு ஆகஸ்ட் 7க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.