×

பாதுகாப்பு வேண்டுமா? வேண்டாமா? – ஜெ. தீபா மற்றும் தீபக் பதிலளிக்க உத்தரவு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.913 கோடிக்கு அதிகமான சொத்துக்களுக்கு தனியாக ஒரு நிர்வாகியை நியமிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோரை வாரிசுகளாக நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயலலிதாவின் சொத்துக்களை சிலவற்றை அவரது பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து சேவை செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்ட நீதிபதிகள், தீபா மற்றும் தீபக்கிற்கு அவர்களது சொந்த செலவில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு கடந்த சில வாரங்களுக்கு
 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.913 கோடிக்கு அதிகமான சொத்துக்களுக்கு தனியாக ஒரு நிர்வாகியை நியமிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோரை வாரிசுகளாக நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயலலிதாவின் சொத்துக்களை சிலவற்றை அவரது பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து சேவை செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்ட நீதிபதிகள், தீபா மற்றும் தீபக்கிற்கு அவர்களது சொந்த செலவில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்த போது, தீபா மற்றும் தீபக்கிற்கு பாதுகாப்பு கொடுப்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, 6 மாதங்களுக்கு பாதுகாப்பு வழங்க ரூ.20.83 லட்சம் பணத்தை முன் பணமாக செலுத்த வேண்டும் என காவல்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு இன்னும் எந்த பதிலும் வரவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பாதுகாப்பு வேண்டுமா? வேண்டாமா? என ஜெ. தீபா மற்றும் தீபக் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.