☰
×

#BREAKING பி.டி.அரசகுமாருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

 

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமாருக்கு ஜாமீன் வழங்கியது சிறப்பு நீதிமன்றம்.

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வாங்கித் தருவதில் பணமோசடி செய்ததாக கைதான பி.டி. அரசகுமாருக்கு ஜாமின் வழங்கி சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணை அதிகாரி முன்பு தினமும் காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்கக்கூடாது; தலைமறைவாகக் கூடாது எனவும் அரசகுமாருக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

முன்னதாக இன்று காலை முதல் பி.டி.அரசகுமார் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அதில், பல்வேறு கல்வி நிறுவனங்களிடமிருந்து பணம் வாங்கியதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் உதவியாளர்கள் வீடு, பி.டி.அரசகுமார், தலைமறைவாக உள்ள முத்துகுமார் வீடுகளில் (5 இடங்கள்) இன்று நடந்த சோதனையில் 44 ஆவணங்கள், ஒரு லேப்டாப் கைப்பற்றப்பட்டு உள்ளதாக மத்திய குற்றப்பிரிவு அறிக்கை  வெளியிட்டுள்ளது.