×

‘கூட்டங்கள், நிகழ்ச்சிகளால் அதிகமாக பரவும் கொரோனா’ எச்சரிக்கும் அதிகாரிகள்!

சென்னையில் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளால் கொரோனா அதிகமாக பரவுவதாக மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டும் வரும் இந்த சூழலில், சிறிய அளவிலான கூட்டங்கள், நிகழ்ச்சிகளால் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதாக பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தி.நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர், கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிக்கு செல்லாமல் இருந்தும் அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவரது உறவினர் ஒருவர் கோவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வீடு
 

சென்னையில் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளால் கொரோனா அதிகமாக பரவுவதாக மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டும் வரும் இந்த சூழலில், சிறிய அளவிலான கூட்டங்கள், நிகழ்ச்சிகளால் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதாக பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தி.நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர், கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிக்கு செல்லாமல் இருந்தும் அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

அவரது உறவினர் ஒருவர் கோவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வீடு திரும்பியதால், அவரின் மூலமாக ராஜேஷுக்கும் அவரது குடும்பத்தில் 11 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இவ்வாறு சிறிய அளவிலான நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களால் பாதிப்பு அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய சென்னை மாநகராட்சி அதிகாரி, மக்கள் வழக்கம் போல இறுதிச்சடங்குகள், திருமணங்களில் பங்கேற்க ஆரம்பித்து விட்டனர். விதிமுறைகளை மீறியும் மக்கள் இது போன்ற ஆபத்தான செயல்களை செய்கின்றனர் என தெரிவித்தார்.

இது குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும். பண்டிகை காலங்கள் நெருங்குவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.