×

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு : எல்லையோர மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பு!

தமிழக எல்லையோர மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாயில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக எல்லையோர மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பது தமிழகத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் கண்காணிப்பு, பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர் . பண்டிகை காலம், மழைக்காலம் துவங்குவதன் மூலம் சவாலான காலகட்டமும் துவங்குகிறது என்று தெரிவித்தார். இதனிடையே தமிழகத்தில்
 

தமிழக எல்லையோர மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனாயில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக எல்லையோர மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பது தமிழகத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் கண்காணிப்பு, பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர் . பண்டிகை காலம், மழைக்காலம் துவங்குவதன் மூலம் சவாலான காலகட்டமும் துவங்குகிறது என்று தெரிவித்தார்.

இதனிடையே தமிழகத்தில் புதிதாக 5,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,51,370 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,751 ஆக உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது .