×

‘மனைவியை பார்க்க முடியவில்லை’..மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்ற கொரோனா நோயாளி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா உறுதி செய்யப்படுபவர்களுள் பலர் மருத்துவமனையிலும் பலர் வீடுகளிலேயேயும் தனிமை படுத்தப்படுகின்றனர். தொடர்ந்து 14 நாட்கள் அவர்கள் தனிமையில் இருப்பதால், உடல் ரீதியாக மட்டுமில்லாமல் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக நடன பயிற்சி, யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பலர் குடும்பத்தை பிரிந்திருக்கும் மன அழுத்தத்தால் மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்த
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா உறுதி செய்யப்படுபவர்களுள் பலர் மருத்துவமனையிலும் பலர் வீடுகளிலேயேயும் தனிமை படுத்தப்படுகின்றனர். தொடர்ந்து 14 நாட்கள் அவர்கள் தனிமையில் இருப்பதால், உடல் ரீதியாக மட்டுமில்லாமல் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக நடன பயிற்சி, யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பலர் குடும்பத்தை பிரிந்திருக்கும் மன அழுத்தத்தால் மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் மனைவியை பார்க்க முடியாமல் ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது. தேனி மாவட்டம் உத்தம மையத்தில் உள்ள சிகிச்சை மையத்தில் கொரோனா உறுதியானதால் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பத்தை பிரிந்து மன அழுத்தத்தில் இருந்த அவர், இன்று கையை அறுத்துக் கொண்டு சிகிச்சை மையத்தின் 2 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அவர் படுகாயத்துடன் உயிர் பிழைத்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனைவியை பார்க்க முடியாததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.