×

சென்னையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்.. பீதியில் மக்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதில் இருந்து மக்களை காக்க மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ள நிலையில் 145 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டுமே 12,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவி வருவதால், மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதில் இருந்து மக்களை காக்க மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ள நிலையில் 145 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டுமே 12,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவி வருவதால், மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா நோயாளி தப்பியோடியதாக வெளியாகும் தகவல் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் மூலம் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு இருப்பதால், அந்த நோயாளியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் தப்பி ஓடுவது தொடர்ந்து நடந்து கொண்டே வருவதால், சுகாதாரத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.