×

அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி மாயம்… விளக்கம் கேட்கும் நீதிமன்றம்

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் காணாமல் போன கொரோனா நோயாளி தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பூக்கடை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு சென்ற தந்தையை காணவில்லை அவரை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.தந்தை பற்றிய தகவலை மருத்துவமனை நிர்வாகம் தர மறுக்கிறது என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கை இன்று
 

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் காணாமல் போன கொரோனா நோயாளி தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பூக்கடை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு சென்ற தந்தையை காணவில்லை அவரை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.தந்தை பற்றிய தகவலை மருத்துவமனை நிர்வாகம் தர மறுக்கிறது என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனி கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டியது அரசு மற்றும் அதிகாரிகளின் கடமை. முதியவர் மாயமானது தொடர்பாக சென்னை பூக்கடை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நாளை பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.