×

இன்று கலெக்டர்கள்… நாளை டாக்டர்கள்… முதல்வர் எடப்பாடி டிஸ்கசன்!- ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, ஊரடங்கு நீட்டிக்கப்படுமா குறித்து தெரியவரும். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் தொற்று அதிகரித்து வந்த நிலையில், தற்போது, தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் நோயின் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைகிறது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, ஊரடங்கு நீட்டிக்கப்படுமா குறித்து தெரியவரும்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் தொற்று அதிகரித்து வந்த நிலையில், தற்போது, தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் நோயின் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைகிறது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

அப்போது, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிய உள்ளார்.

வரும் 31ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகள் வழங்கலாமா, போக்குவரத்து சேவையை தொடங்குவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தியதன் தொடர்ச்சியாக, மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை காலை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.