×

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று!

உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாளொன்றுக்கு சுமார் 5 ஆயிரம் வரை கண்டறியப்பட்ட நிலையில் தற்போது ஆயிரத்திற்கும் குறைவாகவே பாதிப்பு உள்ளது. நேற்றைய நிலவரப்படி 820 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 8,22,370 ஆக உள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,177 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் உணவுத்துறை அமைச்சர்
 

உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாளொன்றுக்கு சுமார் 5 ஆயிரம் வரை கண்டறியப்பட்ட நிலையில் தற்போது ஆயிரத்திற்கும் குறைவாகவே பாதிப்பு உள்ளது. நேற்றைய நிலவரப்படி 820 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 8,22,370 ஆக உள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,177 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டு வந்தார். அதேபோல் திருவாரூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொங்கல் பரிசு தொகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார். இதன் காரணமாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. முன்னதாக களப்பணியாற்றி வந்த அதிமுக எம்எல்ஏ , அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.