×

திருவாரூரில் 100ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 1,875பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38, 716ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று 1,372பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,705 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருவாரூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 113ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 99
 

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 1,875பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38, 716ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் நேற்று 1,372பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,705 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திருவாரூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 113ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 99 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் தற்போது மேலும் 14 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது அம்மாவட்ட மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.