×

‘சென்னையில் ஒரே நிறுவனத்தில்’ 40 பேருக்கு கொரோனா.. அதிர்ச்சி தகவல்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக தேர்தல் நடக்கவிருக்கும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இதனால், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி, தமிழக அரசு மாஸ்க் போடவில்லையென்றால் அபராதம், சமூக இடைவெளி கட்டாயம் போன்ற கொரோனா தடுப்பு நடைமுறைகளை கட்டாயமாக்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், கொரோனா அதிகமாக பரவிய காரணத்தால் 12ம் வகுப்பை தவிர்த்து பிற வகுப்புகளுக்கு
 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக தேர்தல் நடக்கவிருக்கும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இதனால், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் படி, தமிழக அரசு மாஸ்க் போடவில்லையென்றால் அபராதம், சமூக இடைவெளி கட்டாயம் போன்ற கொரோனா தடுப்பு நடைமுறைகளை கட்டாயமாக்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், கொரோனா அதிகமாக பரவிய காரணத்தால் 12ம் வகுப்பை தவிர்த்து பிற வகுப்புகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் 40 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிறுவனத்தின் தரமணி, பெருங்குடி, கந்தன்சாவடி ஆகிய இடங்களில் உள்ள கிளைகளில் 40 பேருக்கு பாதிப்பு கண்டறியபட்டுள்ளதால் நிறுவனத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருக்கிறார்.