×

கடலூர் மத்திய சிறையில் உள்ள 18 கைதிகளுக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,979 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 78 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,481 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 85,859 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் மத்திய
 

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,979 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 78 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,481 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 85,859 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் கடலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகள் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு 4 கைதிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 18 கைதிகளுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.