×

கொரோனா வந்ததால் பரப்புரைக்கு செல்ல முடியாத சுதீஷ்! கலக்கத்தில் தொண்டர்கள்!!

தமிழ்நாட்டில் சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் அதிவேகமாக தொற்று பரவிவருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா உறுதியானது. இதில் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குகுணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த சூழலில் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்தமாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அமமுக கூட்டணியில் 60 இடங்களில்
 

தமிழ்நாட்டில் சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் அதிவேகமாக தொற்று பரவிவருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா உறுதியானது. இதில் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குகுணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த சூழலில் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்தமாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அமமுக கூட்டணியில் 60 இடங்களில் போட்டியிடுகிறது. தேமுதிக சார்பில் பரப்புரை மேற்கொள்ளவிருந்த சுதீஷ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அக்கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஜயகாந்த் பரப்புரைக்கு வருவார் என சொல்லப்பட்ட நிலையில் கொரோனா பரவலால் அவரும் வரவில்லை. கட்சியின் மற்றொரு ‘தல’- யான சுதீஷூம் பரப்புரை மேற்கொள்ள மாட்டார் என்பது தேமுதிகவுக்கு சுணக்க நிலையே