×

செங்கோட்டையில் காவல் ஆய்வாளருக்குக் கொரானா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த கொடிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில், காவலர்களும் துப்புரவு பணியாளர்களும் மருத்துவர்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கில் ஓரளவு தளர்வுகள் அளிக்கப்பட்டும் அவர்களின் பணிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இதனிடையே சென்னை உட்பட பல மாவட்டங்களில் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சமீபத்தில் சென்னை மாம்பலம் போலீஸ்
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த கொடிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில், காவலர்களும் துப்புரவு பணியாளர்களும் மருத்துவர்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கில் ஓரளவு தளர்வுகள் அளிக்கப்பட்டும் அவர்களின் பணிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இதனிடையே சென்னை உட்பட பல மாவட்டங்களில் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

சமீபத்தில் சென்னை மாம்பலம் போலீஸ் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பாலமுரளி கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கும் பாரபட்சமின்றி கொரோனா பரவி வருவது மக்களிடையே பீதியை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் காவல் ஆய்வாளருக்குக் கொரானா தொற்று உறுதியாகியுள்ளது. செங்கோட்டைக் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் இவர், விருதுநகர் லஞ்ச ஒழிப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.