×

காவலர் பாலமுரளியின் இறுதி சடங்கின் போது பாதுகாப்பு பணியில் இருந்தவருக்கு கொரோனா உறுதி!

சென்னை மாம்பலம் போலீஸ் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பாலமுரளி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 13 ஆம் தேதி அவரது உடல் நிலை மோசமானதை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் தனது சொந்த செலவில் ரூ. 2.25 லட்சத்துக்கு பாலமுரளிக்கு மருந்தை வாங்கிக் கொடுத்தார். உரிய சிகிச்சை கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.அதன் பிறகு பாலமுரளியின் உடல்
 

சென்னை மாம்பலம் போலீஸ் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பாலமுரளி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 13 ஆம் தேதி அவரது உடல் நிலை மோசமானதை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே அவர் தனது சொந்த செலவில் ரூ. 2.25 லட்சத்துக்கு பாலமுரளிக்கு மருந்தை வாங்கிக் கொடுத்தார். உரிய சிகிச்சை கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.அதன் பிறகு பாலமுரளியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இருப்பினும் அவரது உடல் நிலை மீண்டும் மோசமடைந்ததை தொடர்ந்து கடந்த 17 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல் ஆய்வாளர் பாலமுரளியின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 18 ஆம் தேதி அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கொரோனாவால் இறந்த காவல் ஆய்வாளர் பலமுரளி உடல் அடக்கத்தின் போது பாதுகாப்புப் பணியில் இருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.