×

சென்னையில் ஒன்றாக அமர்ந்து சீட்டு விளையாடிய 13 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவியுள்ள இடம் சென்னை தான். அங்கு கொரோனா பரவல் குறைவாகவே இருந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியதன் காரணமாக சென்னையில் கொரோனா பெருந்தொற்றாக உருவெடுத்தது. குறிப்பாக ராயபுரம், கோடம்பாக்கம், அண்ணா நகர், திரு.வி.க நகர், தண்டையார்பேட்டை ஆகிய சென்னையின் முக்கியமான இடங்களில் அதிகமாக பரவியுள்ளது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று சென்னையில் 81 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள் துவக்கி
 

தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவியுள்ள இடம் சென்னை தான். அங்கு கொரோனா பரவல் குறைவாகவே இருந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியதன் காரணமாக சென்னையில் கொரோனா பெருந்தொற்றாக உருவெடுத்தது. குறிப்பாக ராயபுரம், கோடம்பாக்கம், அண்ணா நகர், திரு.வி.க நகர், தண்டையார்பேட்டை ஆகிய சென்னையின் முக்கியமான இடங்களில் அதிகமாக பரவியுள்ளது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று சென்னையில் 81 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் ஒன்றாக அமர்ந்து சீட்டு விளையாடிய 13 பேருக்கு இன்று ஒரே நாளில் தொற்று உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. அவர்களுள் ஒருவருக்கு கொரோனா இருந்ததாகவும் அந்த நபர் மூலம் மற்றவர்களுக்கும் கொரோனா பரவியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் விழுப்புணர்வு இல்லாமல் சீட்டு விளையாடுவது போன்ற செயல்களை செய்வதால் கொரோனா பாதிப்பு பெருமளவு பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.