×

சென்னை ஐ.ஐ.டி விடுதியில் கொரோனா… இரண்டு நாட்களில் அறையை காலி செய்ய உத்தரவு!

சென்னை ஐ.ஐ.டி விடுதியில் தங்கியிருப்பவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து விடுதியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், எங்கு செல்வது என்று தெரியாமல் தவிப்பதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சென்னை ஐஐடி-யில் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். மார்ச் மாதம் திடீரென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் விடுதியில் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தி வௌியானது. இதைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் அறையை
 

சென்னை ஐ.ஐ.டி விடுதியில் தங்கியிருப்பவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து விடுதியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், எங்கு செல்வது என்று தெரியாமல் தவிப்பதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை ஐஐடி-யில் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். மார்ச் மாதம் திடீரென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் விடுதியில் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தி வௌியானது. இதைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் அறையை காலி செய்ய வேண்டும் என்று மாணவர்களுக்கு ஐஐடி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஊரடங்கு காரணமாக தற்போது போக்குவரத்து வசதி நிறுத்தப்பட்டுள்ளது. வடக்கில் காஷ்மீர், மேற்கில் குஜராத், கிழக்கில் திரிபுரா வரை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு உள்ளனர். திடீரென்று விடுதியை காலி செய்துவிட்டு சொந்த ஊர் செல் என்று கூறினால் எப்படி செல்ல முடியும் என்று மாணவர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள், சில பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படக் கூடாது என்பதற்காகவே விடுதியை காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ஐஐடி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் மாணவர்கள் எப்படி தங்கள் சொந்த ஊர் செல்வார்கள், எங்கே அவர்கள் தங்குவார்கள் என்ற கேள்விக்கு ஐஐடி தரப்பில் பதில் அளிக்க மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், “செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் ஒரு மெயில் வந்தது. அதில் இணைக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 8 மணிக்குள் வழங்க வேண்டும். அப்படி வழங்காவிட்டால் அவர்கள் ஐஐடி வளாகத்தை காலி செய்துவிட்டு சென்றதாக கருதப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் மாணவர்களுக்கு தேவையில்லாத அழுத்தத்தை ஐஐடி நிர்வாகம் வழங்குகிறது. என் சொந்த ஊர் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ளது. 700 கி.மீ தொலைவில் உள்ள என்னுடைய ஊருக்கு போக்குவரத்து வசதி இல்லாத இந்த காலத்தில் நான் எப்படி செல்ல முடியும். ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானது. மாணவர்கள் அனைவரும் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு ஆளாக்கப்பட்டோம். தற்போது அறையை காலி செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவது ஏற்புடையது இல்லை” என்றனர்.