முதல்வர் ஸ்டாலின் நலம்பெற வேண்டி திருஷ்டி கழித்த கூல் சுரேஷ்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் பெற வேண்டி வடபழனி முருகன் கோயிலில் பூஜை செய்து, அப்போலோ மருத்துவமனையின் நுழைவாயிலில் பூசணி மற்றும் தேங்காய் உடைத்த நடிகர் கூல் சுரேஷ் முதல்வருக்கு திருஷ்டி கழித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் மூன்று நாட்கள் ஓய்வு மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மருத்துவமனையில் இருந்தபடியே அவர் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இன்று (22.7.2025) அவர் அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், அவர்களுடன் அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் பெற வேண்டி வடபழனி முருகன் கோயிலில் பூஜை செய்து, அப்போலோ மருத்துவமனையின் நுழைவாயிலில் பூசணி மற்றும் தேங்காய் உடைத்து முதல்வருக்கு திருஷ்டி கழித்தார் நடிகர் கூல் சுரேஷ். நாளை முதல்வருக்காக திருவண்ணாமலைக்கு பாதயாத்திரை செல்ல போவடததாகவும் அவர் தெரிவித்தார்.