×

சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும்!!

 

சமையல் எரிவாயு  சிலிண்டர்  விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும்: என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


 சமையல் எரிவாயு சிலிண்டர் விலை  ரூ. 15 உயர்ந்துள்ளது. மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இருமுறை உயர்த்தப்படும் நிலையில் இந்த முறை ரூ. 15 உயர்ந்தன் காரணமாக சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 915.50 ஆக உள்ளது.  கடந்த பிப்ரவரி மாதம் 700 ரூபாயாக  இருந்த சிலிண்டரின் விலை செப்டம்பர் மாதத்தில் ரூ.875.50 காசாக அதிகரித்தது. இதை தொடர்ந்து மீண்டும் ரூ.25 அதிகரித்து  900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் மீண்டும் சமையல் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. 



இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "வீட்டுப்பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை 900 ரூபாயிலிருந்து ரூ.915 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள எட்டாவது விலை உயர்வு இதுவாகும். சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வருவது எந்த வகையிலும் நியாயமல்ல! பிப்ரவரி  மாதத் தொடக்கத்தில் ரூ.710 ஆக இருந்த எரிவாயு விலை இப்போது 205 ரூபாய் அதிகரித்துள்ளது. அத்தியவசியப் பொருளான எரிவாயு விலை 8 மாதங்களில் 29% உயர்த்தப்பட்டிருப்பது சரியல்ல. ஏழை - நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.