மதுரை நீதிமன்றத்தில் இருந்து தண்டனை கைதி தப்பி ஓட்டம்
மதுரை போதை தடுப்பு நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்பட்டபோது, திண்டுக்கல் சிறுமலையை சேர்ந்த குற்றவாளி ராஜா தப்பியோடினார்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையை சேர்ந்த ராஜா போதை பொருள் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தண்டனை விபரம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே காவல்துறையினிடமிருந்து தப்பியுள்ளார். போன வாரம் தான் கண்கள் சிவக்க கடும் கோபத்துடன் கொந்தளிப்புடன் ஆவேசமாகவும் உக்கிரமாகவும் இனி இப்படி நடந்தால் அனைவரையும் தொலைத்து விடுவேன் என காவல்துறையினருக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் மீண்டும் ஒரு கைதி தப்பியோடி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சட்டம், ஒழுங்கு குறித்து முதலமைச்சர் விஜய் கடந்த 3 நாட்களாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவரும் நிலையில், கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.