×

முதல்வர் விஜய் தொகுதியில் தொடர் மின்வெட்டு- போராட்டத்தில் குதித்த மக்கள்

 

முதல்வரின் சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்துள்ள பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் விஜயின் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த 4 நாட்களாக மின்வெட்டு ஏற்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. முதலமைச்சர் தொகுதியிலேயே இதுதான் நிலைமை” என பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் முதல்வரின் சொந்த தொகுதியான பெரம்பூர் வியாசர்பாடியில் 3 நாட்களாக மின்சாரம் இல்லை. இருட்டில் குழந்தைகள், முதியோர் தவிக்க, வெறுத்துப்போன மக்கள் அப்பகுதியிலும் சாலை மறியலில் இறங்கியுள்ளனர்.