×

தொடர் கனமழை -   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!
 

 

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.  இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

பந்தலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 278 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து என்று மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.