×

முதுகலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது!!

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைன் வாயிலாக தொடங்குகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற முதுநிலை படிப்புகளுக்கு 10 ஆயிரத்து 610 இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வு ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நிலையில்,  இதற்கு இதில் கலந்துகொள்ள கேட் அல்லது டெட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான கலந்தாய்வு இன்று முதல் ஆன்லைன்  வாயிலாக நடைபெறுகிறது. இன்று  தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் கலந்தாய்வில்,  முதல்கட்டமாக 10 ஆம் தேதி வரை கேட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.  இதை தொடர்ந்து 11 ஆம் தேதியில் இருந்து டான்செட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். இதில் பங்கேற்க பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூபாய் 300 விண்ணப்பக் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது .அதேபோல் எஸ்சி. எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் 150 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் கலந்தாய்வு வைப்பு தொகையாக பொதுப்பிரிவினருக்கு ரூபாய் 5 ஆயிரமும், எஸ்சி ,எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் ஆயிரமும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் கல்லூரிகளில் சேர்க்கையின்போது கழித்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.