ஆட்சியில் பங்கு, 36 தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்?
Feb 2, 2026, 16:15 IST
ஆட்சியில் பங்கு மற்றும் 36 இடங்கள் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் இம்முறை கூடுதல் இடங்களை கோருவதாக கூறப்படுகிறது. கூட்டணி ஆட்சி என்ற விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காங்., 35 தொகுதிகளை கேட்டு வருவதாகவும், அதற்கு திமுக மறுப்பு தெரிவித்து, கூடுதலாக 2 அல்லது 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.
திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்புள்ளது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிகின்றன. ஒவ்வொரு கூட்டணி கட்சியினருடனும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.