×

காங். போட்டியிடும் தொகுதிகள் என்ன? நாளை முக்கிய ஆலோசனை

 

காங்கிரஸ் மாநில மேற்பார்வையாளர் முகுல் வாசினிக் நாளை தமிழகம் வருகை தரவுள்ளார். 

காங்கிரஸ் கட்சிக்கான தமிழ்நாடு மாநில மேற்பார்வையாளர் முகுல் வாசினிக் தமிழ்நாடு வருகிறார். நாளை இரவு சென்னை வரும் அவர் ஞாயிற்றுக்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்தும், உள்கட்சி பூசல் நிலவும் நிலையில் அதை சரி செய்ய டெல்லி காங்கிரஸ் தலைமை அனுப்பி வைக்கிறது. திமுகவுடன் கூட்டணி பங்கீடு சமூகமாக முடிந்த நிலையில் அடுத்ததாக காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் பரிசீலனை உள்ளிட்டவற்றை முகுல் வாஸ்னிக் மேற்கொள்ள உள்ளார்.