விஜய் அளிக்கும் வாய்ப்பை காங்கிரஸ் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - எஸ்.ஏ.சந்திரசேகர்..!
Jan 28, 2026, 13:44 IST
தவெக கூட்டணியில் இணைய காங்கிரஸ் கட்சிக்கு, நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர், “விஜய்யை சரியான முறையில் பயன்படுத்தினால் காங்கிரஸ் வரலாறு படைக்கும்” எனக் கூறினார். மேலும், “தமிழ வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எதற்கும் பயந்தவர் அல்ல. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு அந்த அளவுக்கு அரசியல் பவர் இல்லை. அந்த பவரை விஜய் கொடுப்பார்” என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர், “விஜய் அளிக்கும் இந்த வாய்ப்பை காங்கிரஸ் கட்சி சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றும் கூறினார். எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.