“தவெகவுடன் கூட்டணி முயற்சிகள் தொடக்கத்திலேயே நிராகரிப்பு”- செல்வப்பெருந்தகை
Apr 8, 2026, 19:11 IST
நெல்லையில் காங்கிரஸ் கட்சியை குறிப்பிட்டு விஜய் பேசியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “காங்கிரஸ் என்பது நூற்றாண்டு பாரம்பரியமும், தியாக வரலாறும் கொண்ட ஜனநாயக இயக்கமாகும். தமிழ்நாடு காங்கிரஸ் குறித்து விஜய் பேசியுள்ள கருத்துகள் முற்றிலும் ஆதாரமற்றவை. காங்கிரசுடன் கூட்டணி வைக்க த.வெ.க. எத்தகைய திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டது என்பதை அனைவரும் அறிவர். விஜய்க்கு என்ன கொள்கை என்று புரியாத நிலையில் கூட்டணி முயற்சிகள் தொடக்கத்திலேயே நிராகரிக்கப்பட்டன” என விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை நெல்லையில் பேசிய தவெக தலைவர் விஜய், “உண்மையான காங்கிரஸ் நம் பக்கம் உள்ளது. சில பல கோடிகளை கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸை ஸ்டாலின் சார் கையில் போட்டுக்கொண்டார்” என்றார்.