×

"விஜய் நேற்று முளைத்த காளான்”- செல்வப்பெருந்தகை

 

தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசுகிறார், விஜய் நேற்று முளைத்த காளான் என தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வி பி துரையை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபாலசமுத்திரம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “முதலில் திமுக கூட்டணி 200 முதல் 210 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொன்னோம். ஆனால் மக்களின் எழுச்சியை பார்க்கும்போது கள நிலவரத்தை பார்க்கும் போது 220க்கு மேல் வெற்றி பெறுவோம். அவதூறுகள் பரப்புவதையும், ஆபாசமாக பேசுவதையும் எடப்பாடி பழனிச்சாமி நிறுத்த வேண்டும். ஒருவரது மனம் புண்படும்படி பேசுவது எந்த அரசியல் தலைவருக்கும் நாகரிகம் அல்ல, எடப்பாடி பழனிச்சாமியின் ஆபாச பேச்சை எந்த ஜனநாயகமும் ஏற்றுக் கொள்ளாது. அவருக்கு தோல்வி பயம் வந்தால் வேறு ஏதாவது அறிவிக்கலாம். ஆனால் இது போன்ற அவதூறுகளையும் ஆபாசங்களையும் பேசக்கூடாது. இதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவரை நிராகரிப்பார்கள். 

உண்மையான காங்கிரஸ் எங்கள் பக்கம் இருப்பதாக விஜய் கூறி இருப்பதை முதிர்ச்சியற்றவர் என ஏற்கனவே கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் விமர்சித்துள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்,ஏதோ ஒரிருவர் கட்சி மாறி சேர்ந்து இருப்பதை வைத்து காங்கிரஸ் எங்கள் பக்கம் இருப்பதாக விஜய் கூறுகிறார். அவர் நேற்று முளைத்த காளான் இன்னும் இரண்டு,மூன்று நாட்களில் எங்கள் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரத்திற்காக தமிழகம் வருகிறார். தமிழ்நாட்டுப் பிள்ளைகள் கல்வி அறிவோடு இருப்பது தான் பாஜகவுக்கு பிரச்சனை. அவர்களின் பொய் முகம் ஒரு நாள் வெளியே வரும் முதல்வர் மீது மக்கள் வைத்திருக்கும் பாசம் காரணமாக 230 தொகுதிக்கு மேல் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றார்.