×

அஜித் சாலையில் வந்தால் தமிழ்நாடே பின்னல் திரண்டு நிற்கும்- செல்வப்பெருந்தகை

 

எம்ஜிஆருக்கு பிறகு ரஜினி அஜித்துக்கு தான் துடிப்பான ரசிகர்கள் அதிகம், விஜய்க்கு கூடும் கூட்டம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.


ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்லப்பருந்தகை காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு  ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். குன்றத்தூர் ஒன்றியம் சிறுகளத்தூர், நந்தம்பாக்கம்,பூந்தண்டலம், நல்லூர் உள்ளிட்ட ஊராட்சியில் வாக்கு சேகரித்த வருகிறார் அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக இருக்கக் கூடாது தேர்தல் ஆணையம் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் நியாயமாக நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும் அப்பழுக்கற்ற அதிகாரிகளை மாற்றுகின்றனர் இது உண்மையிலேயே வருந்த தக்கது.

தமிழ்நாட்டின் நிலை பாண்டிச்சேரியிலும் வீசுகிறது காங்கிரஸ் பற்றி விஜய் கூறிய கருத்திற்கு, காங்கிரஸ் 140 ஆண்டு பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க கட்சி காங்கிரஸ் கட்சி மீது குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம் , எவ்வளவோ வெற்றியும் வெற்றியை கடந்தும் 140 ஆண்டுகள் ஓங்கி நிற்கின்றது எங்கள் கட்சி யாருடன் கூட்டணி என்பதை எங்கள் தலைமை முடிவு செய்யும் .த வெ க ஆபத்தான கட்சி விபத்து ஏற்படுத்தும் கட்சி விபத்தில் ஏற்படுத்திய கட்சி விபத்தால் வந்த கட்சி ஆகவே விபத்து நடக்க தான் செய்யும், அவர் தமிழ்நாடு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் இப்படிப்பட்ட செயலில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் ரசிகர்கள் யார் சென்றாலும் பார்க்கின்றனர் .

அஜித் சாலையில் சென்றால் தமிழ்நாடு இரண்டு அஜித் பின்னால் நிற்கும், எம் ஜி ஆருக்கு பின்னர் ரஜினி அஜித்துக்கு தான் ரசிகர்கள் அதிகம் அதுவும் துடிப்பான ரசிகர்கள் .ஆகையால் தாய்மார்கள் நம்முடைய பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும், தவறான வழியில் வழி நடத்துபவர் பின்னால் அனுப்ப கூடாது என கேட்டுக்கொண்டார்.