×

"புதுச்சேரியில் கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை வகிக்கும்"-  செல்வப்பெருந்தகை

 

புதுச்சேரியில் கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை வகிக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் பார்வையாளருமான முகுல் வாஸ்னிக், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய செல்வப் பெருந்தகை, திமுக உடன் கூட்டணி கையெழுத்து ஆன பிறகு ராகுல்காந்தி ஏன் இதுவரை பொதுவெளியில்,சமூக வலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவிக்கவில்லை என்கிற கேள்விக்கு, கூட்டணி அமைந்த பிறகு மகிழ்ச்சியாக இருப்பார்கள்,வெளியில் தெரிவிக்க மாட்டார்கள். புதுச்சேரியில் கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பார்கள் என்கிற கேள்விக்கு, புதுச்சேரிக்கு எப்போதும் காங்கிரஸ் தான் தலைமை. தமிழ்நாட்டுக்கு திமுக தலைமை என தெரிவித்தார்.